ஜமாஅதே இஸ்லாமியும், அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யாவும் அரசுடன் உள்ளதாம்.
Posted by aljazeeralanka.com on February 27, 2025 in | Comments : 0
ஞானசார மீண்டும் அபாண்டம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
இந்த NPP அரசில் ஜமாஅதே இஸ்லாமியும் அன்சார் சுன்னதுல் முஹம்மதிய்யாவும் இருப்பதாக பச்சை பொய்யை சொல்லியுள்ளார்.
இதன் மூலம் தெரிவது இவரை முஸ்லிம்களை பிளவு படுத்த நினைக்கும் சில முஸ்லிம்கள் இவர் பின்னால் இருக்கிறார்களோ தெரியவில்லை. இவர் கோட்டாபய காலத்தில் ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு பொறுப்பாக இருக்கும் போது அவருடன் சில முஸ்லிம்களும் இருந்தனர். அவர்களுக்கு கோட்டாபய சகல சலுகைகளும் கொடுத்ததாகவும் கேள்வி.
இத்தகைய சிலர் மற்றும் இந்த அரசு வந்ததன் காரணமாக பதவிகளை இழந்த முஸ்லிம் கட்சிகளை சேர்ந்தோர், சூபி சார்ந்தோர் இவரை வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகத்தை இவரது பேச்சு ஏற்படுத்துகிறது.
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியும், அன்சார் சுன்னத்துல் முஹம்மதிய்யாவும் நம் நாட்டின் அரசியல் விடயத்தில் ஸீரோக்கள். இவர்கள் இலங்கை அரசியலுக்குள் நுழையாமல் அவ்வப்போது ஆட்சிக்கு வரும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் கௌரவம் தருபவர்கள்.
மற்றபடி நாட்டின் அரசியலையோ முஸ்லிம் அரசியலின் சீர்கேடு பற்றியோ பகிரங்கமாக பேசவே மாட்டார்கள்.
நேர்மையான முஸ்லிம் அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள் என இந்த இரு இயக்கங்களுக்கும் நான் அழைப்பு விடுத்தும் அரசியல் ஹராம் என்பது போல் இருப்பவர்கள்.
அத்தகைய பச்சை பிள்ளைகளை பாவம் ஞானசார NPP அரசியல் இருப்பதாக சொல்லியிருப்பதை பார்க்கும் போது சிரிப்பாய் வருகிறது.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி.
உலமா கட்சி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment