சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டி
Posted by aljazeeralanka.com on March 10, 2025 in | Comments : 0
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இன்று கட்சிக்குள் சிறந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
அனைவரின் வேண்டுகோளின்படி தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதன்படி, மாவட்டத்தில் எந்த இடத்திலிருந்தும் போட்டியிட முடியும் என்றும் சமல் ராஜபக்ஷ கூறினார்.
"மாற்றம் ஏற்பட்டது. மாற்றத்தின் விளைவுகளை இப்போது பார்க்கிறோம். இப்போது அனைவரும் மீண்டும் மாற்றத்தை மாற்ற விரும்புகிறார்கள். எனவே பொதுஜன பெரமுனவின் ஊடாக பிரதேச சபையில் போட்டியிடவுள்ளேன். மேலே போகிறோம். கீழேயும் போகிறோம். நாங்கள் மீண்டும் கீழிருந்து தொடங்குகிறோம். அனைவரின் வேண்டுகோளின்படி, மாவட்டத்தில் எங்கிருந்தும் போட்டியிடத் தயார்" என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment