அமைச்சர் சரோஜா போலின் கருத்துக்கு ஐக்கிய காங்கிரஸ் வரவேற்பு
Posted by aljazeeralanka.com on July 14, 2025 in | Comments : 0
முஸ்லிம் மார்க்க சட்டத்தை மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அமைச்சர் சரோஜா போல் அவர்களின் கருத்தை ஐக்கிய காங்கிரஸ் வரவேற்பதுடன் இனியும் அதற்கு முயற்சிக்க கூடாது எனவும் வேண்டிக்கொண்டுள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்ததாவது,
கடந்த கால அரசாங்கங்கள் அரசை திறம்பட கொண்டு செல்ல முடியாத போது தமது இயலாமையை மறைக்க முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் என்பதை ஊடக மயப்படுத்துவர்.
இதனால் மக்கள் திசை திருப்பப்பட்டு அரசாங்கத்தின் இயலாமைகளை மறந்து விடுவர். இதை மஹிந்த அரசிலும், நல்லாட்சி அரசில் அதிகமாகவும் கண்டோம்.
முஸ்லிம் சட்டங்களில் எத்தகைய திருத்தமும் செய்ய கூடாது என்பதை அன்று முதல் இன்று வரை சொல்லும் ஒரே அரசியல் கட்சி எமது கட்சி மட்டுமே. அச்சட்டங்களை அமுல் படுத்தும் போது உள்ள பௌதீக குறைபாடுகள் திர்க்கப்பட வேண்டுமே தவிர சட்டத்தில் கை வைக்க கூடாது.
முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற கோட்டாபய ராஹபக்ஷவின் இனவாத சிந்தனை காரணமாகவே அவர் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை கொண்டு வந்து ஞானசார தேரர் தலைமையில் அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஊது குழலாக சில விலை போன முஸ்லிம்களையும் நியமித்து அரச நிதியை வீணடித்தார். கடைசியில் நாட்டை விட்டு ஓடும் நிலை அவருக்கு வந்தது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் யார் கை வைக்க முனைந்தாலும் அவர்களின் அரசியல் சீரழிந்ததையே காண்கிறோம்.
ரவூப் ஹக்கீம் கூட முஸ்லிம் மார்க்ஜ சட்டத்தை மாற்றும் இத்தகைய போக்கிரித்தனத்தை செய்தார்.
ஆகவே தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் மார்க்க சட்டங்களில் கை வைக்க மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ்
14.7.2022
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment