கிழக்கு மாகாண உயரதிகளுக்கு எதிராக முறைப்பாடு
Posted by aljazeeralanka.com on September 24, 2025 in | Comments : 0
தனிப்பட்ட வெளிநாட்டுப் பிரயாணத்திற்கு
அரச பணத்தை செலவிட்ட கிழக்கு மாகாண
உயரதிகளுக்கு எதிராக முறைப்பாடு!
---------------------------------------------------------------
தனிப்பட்ட வெளிநாட்டுப் பிரயாணத்திற்கு
அரசபணத்தைமுறைகேடாகபயன்படுத்திய
கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றிய,
தற்போது கடமையாற்றும் நான்கு உயர்
அதிகாரிகளுக்கு எதிராக பொதுச் சொத்தை
துஸ்பிரயோகம் செய்த சட்ட ஏற்பாடுகளின்
கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல்
ஆணைக்குழு, குற்றப்புலனாய்வு பிரிவு
ஆகிய இடங்களில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாட்டினை மனித
உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊழலுக்கு
எதிரான மக்கள் இயக்கத்தின் செயற்பாட்
டாளாருமான ஓய்வு பெற்ற கல்விப்பணிப்
பாளர்.ஏ.எல்.எம்.முக்தார் அனுப்பி வைத்து
உள்ளார்.
இம்முறைப்பாடு தொடர்பாக ஜனாப்.முக்தார்
கருத்து வெளியிடுகையில்,
கிழக்கு மாகாண சபையில் உயர் அதிகாரிகளாக கடமையாற்றிய நான்கு அதிகாரிகள்
தமிழ்நாட்டில் கடந்த 2022 ல் நடைபெற்ற
வாழ் நாள் சாதனையாளர் எனும் விருதைப்
பெற கிழக்கு மாகாண ஆளுனரால் கடமை லீவு, பிரயாண கொடுப்பனவு , வாகன வசதி
என்பன வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கல் வைபவம் இந்திய
அரசினாலோ, இந்திய அரசின் முகவராண்
நிறுவனத்தினாலோ அல்லது தமிழ்நாட்டு
அரசினாலோ நடாத்தப்படாமல் போலி
நிறுவனமொன்றினால் ஒழுங்குபடுத்தப்
பட்டுள்ளது.
இந்த வைபவத்திற்கு செல்வதற்கான விமான சீட்டு வசதி இலங்கையைச் சேர்ந்த
ஒரு தரகரால் மேற்குறித்த நான்கு அதிகாரி
களுக்கும் வழங்கப்பட்டு தங்குமிட வசதியும்
தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் சுற்றறிக்கை மற்றும் அரச
தாபன விதிக்கோவை அத்தியாயம் XII ன்
13:1 , அத்தியாயம் XV ன் 7:1,7:2 ஆகிய பிரிவு
களுக்கு முற்றிலும் முரணான விதத்தில்
இக்கொடுப்பனவுகள் அப்போது கடமையில்
இருந்த பிரதம செயலாளர், பிரதிப்பிரதம
செயலாளர்- பயிற்சி ஆளணி, பிரதிப்பிரதம
செயலாளர் - நிதி ஆகியோரின் சிபாரிசுக்
கமைய அப்போதைய கிழக்கு மாகாண
ஆளுனரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி
குறுங்காலவெளிநாட்டு கலந்துரையாடல்,
செயலமர்வுகள், கற்கை நெறிகளில் ஈடுபடு
வோர் மட்டுமே அதற்கான கடமை லீவு,
கடமைக்கால சிறு கொடுப்பனவுகள்,வாகன
வசதிகளைப் பெற முடியும். ஆனால் இவை
யாவற்றுக்கும் முரணான வகையில் ஊழல்
புரிந்து இக்கொடுப்பனவு பெறப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவை தற்போதைய அக்கரை
பற்று மாநகர ஆணையாளரும், தற்போது
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலா
ளராக கடமையாற்றுபவரும், கிழக்கு சுகாதார அமைச்சு செயலாளராக கடமையாற்றி
மட்டு.அரச அதிபராக கடமையாற்றியவரும்,
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் இதனை
முறையீனமாக பெற்றுள்ளனர்.
தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின்
அதிகாரிகளும் இக்கொடுப்பனவை சட்ட
ரீதியற்ற கொடுப்பனவு எனவும் இக்கொடுப்
பனவை மீள அறவிட்டு இதனை பெற்றவர்
களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதம செய
லாளருக்கு அறிக்கை இட்டும் எவ்விதமான
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த கால அரசாங்கத்தில்
இடம்பெற்ற முறைகேடுகள், நிதி துஸ்பிர
யோகம் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகள்
எடுக்கப்படுவதால் அரச நிதியை துஸ்பிர
யோகம் செய்துள்ள மேற்படி நான்கு உயர்
அதிகாரிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும்
கோரியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment