BREAKING NEWS

தலைவர் அஷ்ரப் கொலையில் ஹக்கீமுக்கு பங்குண்டா?

தலைவர் அஷ்ரப் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? (ஏ.எல்.நிப்றாஸ் - வீரகேசரி) 'ஒரு சமூகத்தின் குரலாக இருந்த தலைவனுக்காக நமது குரல்கள் ஏன் எழவில்லை?' என்று,; ஆய்வாளர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்டீன் வெளியிட்டுள்ள 'மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம்' என்ற ஆய்வுநூலின் முன்பக்கத்திலேயே கேள்வி எழுப்பியிருக்கின்றார். அதாவது, முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் அடையாளத்தை தந்து, தனித்துவ அரசியலில் கோலோச்சிய ஒரு தலைவன் விமான விபத்தில் மரணத்தாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற உண்மையைக் கண்டறிவதற்கு அவரது சிஷ்ய அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கடந்த 25 வருடங்களாக ஏன் பாடுபடவில்லை என்பதுதான் இந்த நியாயமான கேள்வியாகும். இந்நிலையில்;, ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்டீன் மறைந்த தலைவரின் மரணம் பற்றி எழுதியிருக்கின்ற புத்தகம் மற்றும் அது தொடர்பாக கிழக்கில் அண்மையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் துறைசார்ந்தவர்கள் ஆற்றிய உரைகள் ஆகியவை இன்னுமொரு கோணத்திலும் புதிய ஆதாரங்களுடனும் இந்த மரணத்தை நோக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நூல் அஷ்ரபின் மரணம் எப்படி நடந்தது என்ற முடிவுரையை எழுதவில்லை. அஷ்ரபின் அரசியல், அவரது மரணம், அப்போதிருந்த அரசியல் சூழல், அதற்குப் பின்னரான களநிலை மாற்றங்கள், விசாரணைகள் எனப் பல விடயங்களை ஆதாரபூர்வமாக விபரி;க்கின்றது. அதன்படி உண்மையை வெளிக் கொணரவும் நீதியை நிலைநாட்டவும் கோருகின்றது. எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் என்ற இந்த நூலுக்கு அஷ்ரபோடு நீண்டகாலம் மிக நெருக்கமாக இருந்தவரும் அவரது 'நான் எனும் நீ' நூலின் பதிப்பாளருமான எம்.பௌஸர் எழுதியுள்ள முன்னுரையில் நேரடியாகவே 'இது வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை' என்பதைச் சொல்லியிருக்கின்றார். 'அஷ்ரபின் படுகொலை மரணம், 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏ. யினால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வர்டோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது. அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளுர் திட்டமிடல் அல்ல. இதன் பின்னால் சர்வதேச அரசியலின் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கின்றது என நான் உறுதியாக நம்புகின்றேன். அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள். இதன் பின்னால் நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் இருந்துள்ளனர்' என்று பௌஸர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தேசியத்தோடும், தமிழ்த் தேசிய அரசியலோடும் பயணித்த முஸ்லிம்களுக்கான அரசியலை தனித்துவ அடையாள அரசியலாக மாற்றியவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆவார். எம்.எச்.சேகு இஸ்ஸதீன் போன்றோர் அவருக்கு துணை நின்றனர். 15 வருடங்களே முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்தார். அதற்கிடையில் அவர் நட்ட மரம் பெருவிருட்சமாக வளர்ந்திருந்தது. பெருந்தேசியமும் தமிழ்த் தேசியமும் இதனை சாதகமாக பார்க்கவில்லை. 'அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தை பெற்றுத் தரவில்லை என்றால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்' என்று ஒரு காலத்தில் பேசிய அஷ்ரப், பின்னர் விடுதலைப் புலிகளின் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததால், தமிழ் ஆயுதக் குழுக்களும் அஷ்ரபின் வளர்ச்சியை பொறுக்கவில்லை எனலாம். மிக முக்கியமாக, கொழும்பை மையமாகக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியலின் மையப் புள்ளி கிழக்கு நோக்கி நகர்ந்ததை தென்னிலங்கையின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் பெரும் சவாலாகப் பார்த்தனர்;. சந்திரிக்காவின் நம்பிக்கைகு உரியவராக, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மு.கா.வும் தலைவரும் மாறியிருந்தமை தென்னிலங்கைச் சக்திகளுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆக மொத்தத்தில், மேற்படி நூல் அறிமுக நிகழ்;வில் உரையாற்றிய சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் கூறியது போல, 'பல தரப்பினருக்கும் ஒரு தலையிடியாக, தேவையற்ற ஆணியாக எம்.எச்.எம். அஷ்ரப் மாறியிருந்தார்'. அஷ்ரபினதும் மு.கா.வினதும் கிடுகிடு வளர்ச்சி என்பது பலருக்கு தலையிடியாக மாறியிருந்தது. இந்த நேரத்தில்தான், ஆளுக் கட்சிக்கு எதிரான காட்டமான பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டு. 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி கொழும்பிலிருந்து அம்பாரை நோக்கி அஷ்ரப் பயணித்த போது அராநாயக்க மலைத் தொடருக்கு மேலாக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை பின்னர் சமர்ப்பித்தது. ஆனால், இந்த ஆணைக்குழு பற்றிய வர்த்தமானி அறிவித்தலில் அஷ்ரப் மரணித்த திகதி பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது முதற்கொண்டு விசாரணைகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதாக ஆய்வாளர் சர்ஜூன் வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த அறிக்கையின் பிரதி தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்க வேண்டும். ஆனால், அது இன்னும் தரப்படவில்லை என்று சுவடிகள் திணைக்களம் எழுத்துமூலம் சர்ஜூனுக்கு அறிவித்துள்ளதை சட்டத்தரணி பஹீஜ் சுட்டிக்காட்டுகின்றார். இது தொடர்பில் ஜனாதிபதி சந்திரிகா அப்போதைய விமானப்படைத் தளபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 'சொல்லாடலின்' உட்கிடையான அர்த்தம் குறித்தும் அவர் சந்தேகங்களை எழுப்பினார். தலைவர் பயணித்த ஹெலிகொப்டர் பறப்பதற்கு தகுதியானதுதானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. ஆகவே, உண்மையில் இது கொலை என்றால், வெளிநாட்டு சக்திகளின் பின்னணியில், ஒன்று அல்லது இரண்டு உள்நாட்டு தரப்பினர் இணை;நது இதனை செய்து முடித்திருக்கின்றார்களா? என்பதுதான் ஆய்வாளரும் விடயமறிந்தவர்களும் எழுப்புகின்ற கேள்வியாகும். அக்கால அரசியல் சூழலை மீள் வாசிப்புச் செய்தால், இந்த கேள்வியின் நியாயம் புரியும். இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் சில வெளிநாடுகளின் தலையீடுகளை மர்ஹூம் அஷ்ரப் விரும்பவில்லை என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக, நோர்வே முதற்கட்டமாக சமாதானப் பேச்சுவார்த்தை திட்டமொன்றை கொண்டு வந்தபோது 'இந்த திட்டத்தின் மூலம் வடக்கு, கிழக்கிற்கோ எனது சமூகத்திற்கோ எந்த நன்மையும் இல்லை. எனவே இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்மேடன'; என்று சந்திரிகாவிடம் அஷ்ரப் சொன்னதாக அஷ்ரபை அதற்கு முதல்நான் இரவு 11 மணிக்கு சந்தித்த (தற்போதைய தேசிய காங்கிரஸ் தலைவர்) ஏ.எல்.எம்.அதாவுவ்லா கூறிய கருத்து இந்த நூலில் உள்ளடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி, அஷ்ரப் இருக்கும் வரைக்கும் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சிக்கு வருவது அப்போது சுலபமான காரியமாக இருக்கவில்லை என்ற விடயத்தையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே, இவ்வாறு பலதரப்பட்ட தரப்பினரும் தமது திட்டங்களை நிறைவே;ற்றுவதற்கு ஒரு சவாலாக அஷ்ரப் கருதப்பட்டதாக சொல்கி;ன்றார்கள். ஆகவேதான். பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆய்வாளர் சர்ஜூனும் கேள்வி சந்தேகப்படுவது போல, அஷ்ரப் உயிருடன் இருக்கும் வரை தமது திட்டங்களை செயற்படுத்த முடியாது என்று கருதிய தரப்பினர் அவரைக் கொல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா? என்பதுதான் பிரதான கேள்வியாகும். புதிப்பாளரும் முக்கிய அரசியல் நோக்கருமான பௌஸர் இந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்து இவ்விடத்தில் முக்கியமானது. '2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய காய்நகர்த்தலே அஷ்ரப் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும். ஒரு நாட்டில் ஒரு விடயத்தை செய்வதற்கு முன் தமது நிகழ்ச்சி நிரலை தங்குதடையின்;றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்' என்று அவர் கூறியுள்ளார். இந்த ஹெலியில் தலைவர் அஷ்ரபுடன் பலர் பயணித்து உயிரிழந்தனர். கதிர்காமத்தம்பி என்ற ஒருவரும் சென்றிருந்தார். அவருக்கு விடுதலைப் புலிகள் பின்னர் மாவீரர் பட்டம் வழங்கியதாகவும் அவர் கொண்டு சென்ற பையிலேயே குண்டு இருந்திருக்கலாம் என்றும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், சர்ஜூன் ஜமால்தீனின் இந்தப் புத்தகத்தில் இன்னும் ஒரு மர்மம் வெளிக் கொணரப்பட்டிருக்கின்றது. அன்றைய தினம் அஷ்ரபுடன் கதிர்காமத்தம்பி மட்டுமன்றி பெரியதம்பி என்று ஒருவரும் பயணித்துள்ளார். அவரது பயணப் பையும் சோதிக்கப்படவில்லை என்ற புதிய தகவல் இன்னும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. முஸ்லிம் சமூகம் சந்தேகப்படுவது போல, வெளிநாடு ஒன்று, பல உள்நாட்டு சக்திகள் இணைந்து இந்த கொலையைச் செய்திருக்கின்றார்கள் என்றால். அவர்களது நோக்கம் நிறைவேறியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அஷ்ரபின் மரணத்தை தொடர்ந்து,; மு.கா.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்ட பிறகு நோர்வே உள்ளே வந்தமையும், இலங்கையின் அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தையும் நோக்குகின்ற போது இது இலகுவாக புரியும். ஆனால், 'தலைவர் மரணித்துவிட்டார் இனி என்ன செய்யலாம்' என்று கூறிய அஷ்ரபின் மனைவி பேரியல் மட்டுமன்றி, மு.கா. தலைவர் ஹக்கீம், அதாவுல்லா, பசீர், ஹசன்அலி றிசாட், ஹிஸ்புல்லா, சேகு இஸ்ஸதீன் உள்ளடங்கலாக யாருமே இந்த மறைக்கப்பட்ட விவகாரத்தி;ன் உண்மையை வெளிக்கொணர ஏன் குரல்கொடுக்கலில்லை என்பது எல்லாவற்றையும் விட பெரிய மர்மங்கள் நிறைந்த கேள்வியாகும். - ஏ.எல்.நிப்றாஸ், ஊடகவியலாளர் வீரகேசரி (13 ஜூலை 2025)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar