BREAKING NEWS

சிறுவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடிக்க‌ முடியுமா?

17 வ‌ய‌து சிறுவ‌ர்க‌ள் சேர்ந்து பிள்ளை பெற்ற‌ செய்தி ப‌ர‌வுகிற‌து. அப்ப‌டியாயின் இவ‌ர்க‌ள் 16 வ‌ய‌தில் உற‌வு வைத்திருக்க‌ வேண்டும். கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ இருவ‌ருக்கும் திரும‌ண‌ம் முடித்துக்கொடுப்ப‌தாயின் பொது ச‌ட்ட‌த்தின் ப‌டி முடியாது. ஏனென்றால் ஐ நா ச‌பையின் முட்டாள் த‌ன‌மான‌ க‌ருத்தின் ப‌டி 17 வ‌ய‌தின‌ர் சிறுவ‌ர்க‌ள். சிறுவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடிக்க‌ முடியுமா? சிறுவ‌ர்க‌ள் உட‌லுற‌வு வைத்து குழ‌ந்தை பெற‌ முடியுமாயின் ஏன் அவ‌ர்க‌ளை திரும‌ண‌ம் முடித்து வைக்க‌ முடியாது?. இத‌னால் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் ஆணோ பெண்ணோ திரும‌ண‌ம் முடிப்ப‌தாயின் அவ‌ர்க‌ள் வ‌ய‌துக்கு வ‌ந்திருக்க‌ வேண்டும் என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ம். ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது பெண்ணுக்கு மாதவிடாய் வர வேண்டும். பெண் பெரியவள் ஆனதும் கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் சொல்லவில்லை. அத்துடன் அவளாக திருமணம் செய்யவும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அவள் திருமணம் முடிப்பதாக இருந்தாலும் பெற்றோர் அனுமதி வேண்டும் இத‌னால்தான் சொல்கிறோம் முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் எவ‌ரும் கை வைக்க‌ கூடாது என‌. முபாற‌க் முப்தி உல‌மா க‌ட்சி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar