முஸ்லிம் காங்கிரசின் வட்டார அமைப்பாளர்கள்
Posted by aljazeeralanka.com on October 21, 2025 in | Comments : 0
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை பிரதேசத்திற்கான மத்திய குழு கூட்டம் நேற்றைய தினம் (20.10.2025) மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் தாஜுடீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியக்க் கலந்து கொண்டார். கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எஸ்எம்எம்.முஸர்ரப், கட்சியின் உதவிச்சலாளர் மன்சூர் ஏ காதர் , கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளரான ஏ.சி.சமால்தீன், கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான, அமீர், நவாஸ், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், இளைஞர்கள் என பலரும் நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நேற்றைய நிகழ்வில் அம்பாரை மாவட்டம் கல்முனை தொகுதிக்குட்பட்ட சில இளைஞர் அமைப்பாளர்கள் , தேசிய இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் இனால் நியமிக்கப்பட்டு , அவர்களுக்கான நிமனக் கடிதங்கள் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. அந்தவகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராக A. Ahamed Shawkky Hakkani
அவர்களும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கான இளைஞர்அமைப்பாளராக MOHAMED MANSOOR MOHAMED FAMY அவர்களும், சம்மாந்துறை பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக
Mohamed Ismail Mohamed Arshath அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் மருதமுனை பிரதேசத்திலுள்ள 4 வட்டாரங்களுக்கும் , கல்முனை பிரதேசத்தில் ஒரு வட்டாரத்திற்குமான இளைஞர் அமைப்பாளர்கள் முதல் கட்டமாக நியமக்கப்பட்டனர்.
அந்த வகையில் கல்முனை 13 ஆம் வட்டாரத்திற்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளராக ARA.Jowsan அவர்களும், மருதமுனை 05 ஆம் வட்டாரத்திற்கான இளைஞர் அமைப்பாளராக Amanullah Afras அவர்களும், மருதமுனை 04 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக UAM JAREETH அவர்களும், மருதமுனை 03 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக Thanees Ahamed அவர்களும், மருதமுனை 02 ஆம் வட்டார இளைஞர் அமைப்பாளராக NM.Jabran அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
இளைஞர் காங்கிரஸினை வலுப்படுத்தும் வகையில் ஏனைய பிரதேசத்திற்கான இளைஞர் நியமனங்களும் விரைவில் வழங்கப்படும் என்பதை தேசிய இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.எம்.முஸர்ரப் அவர்கள் உறுதிப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment