BREAKING NEWS

பெற்றோல் விலை குறைப்பு

31 October 2025 | sinduja எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி அதன் புதிய விலை 294 ரூபாயாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.    அதன்படி அதன் புதிய விலை 318 ரூபாயாகும் .  அதேவேளை, வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 277 ரூபாயாகவும் , ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 355 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 180 ரூபாயாகவும் மாற்றமின்றி அதே விலையில் நிலவுகின்றன

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar