BREAKING NEWS

முஷாரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி

பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஷாரப் முதுநபீன் 15 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கில் (25) அவரின் சட்டத்தரணிகளால் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட்டார். முஷாரபின் இணைப்பாளராக செயற்பட்ட பொத்துவிலைச் சேர்ந்த நியாஸ் என்பவரிடம் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று அதற்கான ஒரு காசோலையையும் கையெழுத்திட்டு நியாஸிடம் கொடுத்துவிட்டு பணத்தை இதுவரைக்கும் மீளத் தராமல் ஏமாற்றி வருவதாக SCIB இல் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக முஷாரபை பலமுறை அழைத்தும் சமூகமளிக்காத நிலையில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழக்கொன்றை முஷராப் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இணங்கிக் கொண்டதற்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷாரப் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பிரயாணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி மீண்டும் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வருகின்றது. பாதிக்கப்பட்ட நியாஸ் சார்பில் சட்டத்தரணி றாஸி ஜாபீர், பண மோசடியில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முஷாரப் முதுநபீன் சார்பில் சட்டத்தரணிகளான சாதீர், உவைஸ், முகைதீன் ஆகியோர் உட்பட பலர் ஆஜராகி இருந்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar