ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கைது செய்யப்படலாம்
Posted by aljazeeralanka.com on November 10, 2025 in | Comments : 0
ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சுக்கான பல மாடி கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரிக்கப்பட்டு அல்லது கைது செய்யப்படலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்கான மாத வாடகை 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment