பட்ஜெட்டுக்கு எதிராக நிசாம் காரியப்பர்
Posted by aljazeeralanka.com on November 13, 2025 in | Comments : 0
2026 வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களது தின சம்பளத்தை அதிகரிக்க அரசு முன் வைத்துள்ள யோசனைக்கு எதிராக பா.உ நிஸாம் காரியப்பர் பேசியிருப்பதை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
தோட்டத் தொழிலாளரது தினக் கூலியிற்கான போராட்டம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, நாட்டில் கொவிட் 19 ஐத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட முன்னர் சுமார் ஒரு தசாப்த காலம் அவர்களது கோரிக்கை அரசியல் அரங்கில் பேசப்பட்டது.
தற்போதைய வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி தோட்டக் கம்பனிகள் 200 ரூபாயை அடிப்படை சம்பளத்தில் உயர்த்துவதற்கும் அரசு வருகைக்கான ஊக்குவிப்பாக 200 ரூபாயை தருவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் தனியார்துறை கம்பனிகளுக்கு உழைப்பவர்கள், கம்பனிகளே அவர்களது சம்பளங்களை தீர்மானிக்க வேண்டும், திறைசேரியினால் வரியிருப்பாளர்ளது நிதியில் இருந்து தரப்படக் கூடாது என்ற வாதம் சிறுபிள்ளைத் தனமானது.
ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஓரளவாவது தீர்க்க முனையும் அரசாங்கத்தின் பட்ஜட்டை நக்கலடிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பா.உ நிஸாம் காரியப்பர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும், அது கட்சியின் நிலைப்பாடாக இருந்தால் கட்சி முன்வைக்கும் மாற்றீடு யோசனை பற்றி பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும், கட்சியின் நிலைப்பாடு இல்லா விட்டால் அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை விடுக்கிறது.
முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment