கல்முனை சாஹிரா வெள்ளப்பெருக்கு பிரச்சனை
Posted by aljazeeralanka.com on November 04, 2025 in | Comments : 0
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட காலமாக நிலவிய வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டு மூலம் வினைதிறனான வடிகான் அமைப்பு!!!!!
(underground storm water drainage system)
-------------------------------------------------
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலையின் கல்விச் சமூகமும் ஒன்றிணைந்து ஓர் வேண்டுகோளை எமது கௌரவ பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.அதுக்கு அமைவாக பாடசாலையில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளபெருக்குக்கான தீர்வினை எமது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக வீதி அபிவிருத்தி திணைக்களத்துடன் இனைந்து நேற்று(03.11.2025) உத்தியோபூர்மாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பொறியாளர் முனாஸ், கல்முனை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஜாபீர், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-ஊடக பிரிவு-
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment