ரயிலில் வியாபார தடை. அரசின் நல்ல செயல்
Posted by aljazeeralanka.com on November 04, 2025 in | Comments : 0
புகையிரதப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவிதமான வியாபாரத்தையும் புகையிரதங்களுக்குள் மேற்கொள்வது
தடை செய்யப்பட்டுள்ளது என கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
புகையிரதத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு புகையிரத பொது முகாமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதையும் நீதவான் வலியுறுத்தினார்.
புகையிரதப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 11 சந்தேகநபர்களுக்கு எதிராக இலங்கை புகையிரதத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் அழைக்கப்பட்டபோதே நீதவான் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டிருந்த 07 சந்தேகநபர்களுக்கு தலா 2,000 ரூபா வீதம் 14,000 ரூபா அபராதம் விதித்த நீத
வான், நீதிமன்றத்தில் ஆஜராகாத 04 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment