குமார் பொன்னம்பலத்தை நெருங்க “சீத்தா” என்கின்ற ஒரு உயர்தர விலைமாது பயன்படுத்தப்பட்யார்
Posted by aljazeeralanka.com on December 27, 2025 in | Comments : 0
கஜேந்திரகுமார் எம்பியின் தகப்பன் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலையைச் செய்ய குமார் பொன்னம்பலத்தை நெருங்க “சீத்தா” என்கின்ற ஒரு உயர்தர விலைமாது பயன்படுத்தப்பட்டதாகவும், கஜேந்திரகுமார் எம்பியின் தந்தை குமார் பொன்னம்பலம் Azad - ஆசாத் என்னும் நபருக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து தமிழ் பெண்களை தருவித்துக் கொடுத்து அவர்கள் பாலியல் உறவு கொள்வதை ரசித்தார் என்றும் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆசிரியராக இருந்த Sunday Leader பத்திரிகை 2002 ஆம் ஆண்டு கட்டுரையொன்றைப் பிரசுரித்திருந்தது.
2002 February 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட Sunday leader பத்திரிகையில் Frederica Jansz எனும் புலனாய்வுப் பத்திரிகையாளர் எழுதிய “Ponnambalam killers caught on tape” எனும் தலைப்பிட்ட பத்தியில் குமார் பொன்னம்பலத்தின் கொலை குறித்து பொலிஸ் கான்டபிள் சுகத் ரணசிங்க என்பவருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரா நுவான் வட்டசிங்க என்பவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி சம்பாசனையின் transcript - முழுமையான உரை வடிவம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த சம்பாசணையிலேயே மேற்படி பாலியல் குற்றச்சாட்டுகள் குமார் பொன்னம்பலம் மீது வைக்கப்பட்டிருந்தது. அத்தோடு அந்தக் காலகட்டத்தில் “ராவய” என்கின்ற சிங்களப் பத்தரிகையும் மேற்படி குற்றச்சாட்டுகளை குமார் பொன்னம்பலம் மீது தமது புலனாய்வுச் செய்தியறிக்கைகள் ஊடாக வெளியிட்டிருந்தது. அத்தோடு “ராவய” சிங்களப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த விக்டர் ஐவன் அந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் தனிப்பட்ட வாழ்வும் அரசியலும் குறித்து எழுதிய புத்தகமாக “செளர ரஜினி - Bandit Queen” எனும் புத்தகத்திலும் இந்தக் கொலை குறித்தும் குமார் பொன்னம்பலத்தை நெருங்கப் பயன்படுத்தப்பட்ட விலைமாதுவான “சீத்தா” தன்னுடன் தொடர்பு கொண்டு அளித்த தகவல்கள் குறித்தும் எழுதியிருந்தார்.
விக்டர் ஐவன் ஜேவிபியின் ஆரம்பகால உறுப்பினராக றோகன விஜயவீரவுடன் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்ப இங்கு நான் Dr.Ramanathan Archchuna- அருச்சுனா ஆதரவாளர்கள் ❤️அர்ஜனாவிற்கு சுட்டிக்காட்ட விரும்பும் விடயம் என்னவெனில் அர்ஜூனாவின் தாய் குறித்து கஜேந்திரகுமார் எம்பி ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேச வேண்டிய தேவையில்லை. அதிலும் அவரது தாய் குறித்து ஆபாசமாக ஆங்கிலத்தில் பேசியதைக் கேட்ககூடியதாகவுள்ளது.
அவ்வாறு அவர் பேசிய காரணத்தால் அர்ஜூனாவும் “நான் என்னுடைய அம்மாவை வைத்தியசாலையில் பார்த்தேன் பார்க்காமல் இருக்கிறேன் அது என் தனிப்பட்ட விடயம் ஆனால் உமது தகப்பன் ஒரு பாலியல் துர்நடத்தையுள்ள ஆசாமி என இலங்கையின் இரண்டு புகழ் பூத்த ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் விக்டர் ஐவன் என இருவர் எழுதியுள்ளனரே இதற்கு ஏன் நீர் வழக்கு போட்டு உமது தந்தை அவ்வாறானவர் இல்லை என நிரூபிக்கவில்லை. எனக் கேட்டிருக்கலாம். அத்தோடு உமது தந்தையின் கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதே அந்த பத்திரிகையாசிரியர்கள் குற்றஞ்சாட்டியி்ருந்தனர். நீர் ஏன் உமது தந்தையின் படுகொலைக்கு இதுவரை நியாயம் பெற்றுக் கொள்ள சட்டப் போராட்டம் ஒன்றைச் செய்யவில்லை என்றும் கேட்டிருக்கலாம். மறுமுறை தனிப்பட்ட விடயங்களை கஜேந்திரகுமார் பேசினால் அர்ஜுனா இவற்றைக் கேட்கலாம் என ஞாபகப்படுத்துகின்றேன். ஏனெனில் எதிரி முறைமீறுவதன் வழியாக நாம் முறைமீற வழிசமைத்தவனாகின்றான்… என Art of War எனும் புத்தகம் சொல்கிறது.
Arunantham Arun FB
😊😊🙏🙏
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment