பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஏன் அடிக்கடி மோதிக் கொள்கின்றன
Posted by aljazeeralanka.com on February 27, 2026 in | Comments : 0
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஏன் அடிக்கடி கீரியும் பாம்பும் போல மோதிக் கொள்கின்றன என்று தெரியுமா?
🇵🇰 🔥 🇦🇫 🇵🇰 🔥 🇦🇫🇵🇰 🔥 🇦🇫🇵🇰 🔥 🇦🇫
இரண்டு நாடுகளுமே ஆழமான வரலாற்று, புவியியல் மற்றும் மத ரீதியான உறவுகளை கொண்டிருந்த போதிலும், இஸ்லாமாபாத் மற்றும் காபூல் இடையேயான உறவு 2025-2026 ஆம் ஆண்டிகளில் மிகவும் மோசமடைந்து வருவதை காணலாம்.
இந்த சர்ச்சைக்கான காரணங்களாக
நான்கு முக்கிய புள்ளிகள் உள்ளன.
1️⃣ டுராண்ட் (The Durand Line) எல்லைக் கோடு: இரு நாடுகளையும் பிரிக்கும் இந்த எல்லைக் கோடு 1893 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிட்டனால் வரையப்பட்டது.
இதனால் பஷ்டூன் பழங்குடியினர் இரண்டாக பிரிக்கப்பட்டனர். பாகிஸ்தான் இதனை காலனித்துவத்துவம் மூலம் பெறப்பட்ட சட்டபூர்வமான சர்வதேச எல்லையாகக் கருதுகிறது.
ஆனால் தாலிபான் அரசு உட்பட அதற்கு முன்னர் இருந்த ஆப்கான் அரசுகள் யாவும் இது காலனித்துவம் திணித்த வரை கோடு
என்பதால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மறுக்கிறது,
2️⃣ தாலிபான் (TTP) விவகாரம்:
இதுதான் தற்போதைய மோதலுக்கான பிரதான காரணமாகும். பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தாலிபான் போராளிகளுக்கு காபூல் அரசு பாதுகாப்பான புகலிடங்களை வழங்குவதாக இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுகிறது.
அக்டோபர் 2025 இல், ஆப்கானிஸ்தானின் தாலிபான் தலைவர்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதும் இதற்காகத்தான்.
இத்தாக்குதல்கள் ஆப்கானின்
இறையாண்மையை மீறுவதாக காபூல் குற்றம் சாட்டுகிறது.
3️⃣ பிராந்திய பதட்டங்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்.
பலுசிஸ்தான் விடுதலைப் படைக்கு ஆப்கான் அடைக்கலம் கொடுப்பதாக இஸ்லாம் ஆபாத் குற்றம் சாட்டி வருகிறது.
அத்தோடு ஆப்கானை நிலைகுலையச் செய்யும் தீவிரவாத குழுக்களுக்கு
இஸ்லாமாபாத் ஆதரவு வழங்குவதாக
காபூல் அதன் மீது குற்றம் சாட்டுகிறது.
இந்த பதட்டத்துக்குள் இந்தியா தந்திரமாக புகுந்து திருவிளையாடல் விளையாடுவதும் கவனிககத்தக்கது.
இங்கே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டுகிறது..
4️⃣ பொருளாதார அழுத்தங்கள் மற்றும்
அகதிகள் பிரச்சினைகள்:
அடிக்கடி எல்லை கடவைகளை மூடுவதால் குறிப்பாக (டோர்காம் கடவை) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பாதிப்படைகின்றன.
அத்தோடு ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்துவது பற்றிய பிரச்சினையும் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது,
பிராந்தியநாடுகளும் நலன்விரும்பும் நாடுகளும் கூட்டிணைந்து மத்தியஸ்தம் வகித்து பதட்டத்தை குறைக்குமா அல்லது
போர்க்கள சூழல் இன்னும் விரிவடையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
✍ தமிழாக்கம் / imran farook
#Follow_us_to_receive_the_most_amazing_storie_the_latest_news_and_Useful_quotes
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment