மத்திய கிழக்கு மோதல்கள் - புதிய நிலைவரம்
Posted by aljazeeralanka.com on February 28, 2026 in | Comments : 0
மத்திய கிழக்கு மோதல்கள் - புதிய நிலைவரம்
28 February 2026 | sindu
இஸ்ரேல் - அமெரிக்க வலிந்த தாக்குதல்களையடுத்து ஈரான் மேற்கொள்ளும் பதில் தாக்குதல்களால், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நிலைகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டார் ஏர்வேஸ், அந்தப் பகுதிகளுக்கான தமது சேவைகளை நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அபுதாபியிலுள்ள அமெரிக்க நிலைகள் மீதும் கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான், புரட்சிப் படைகளின் தளபதிகள் சிலரும் அரசியல் அதிகாரிகள் சிலரும் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.
அரச அலுவலகங்கள் இயங்குவதும் வரையறுக்கப்பட்டுள்ளன.
சிரியா, தனது வான்பரப்பை மூடியுள்ளது.
டுபாயிலும் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளபோதிலும் அதற்கான காரணம் தெரியவில்லை.
மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏயார் இந்தியா நிறுவனம் நிறுத்தியிருக்கிறது.
இதேவேளை ஈரானின், இரண்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஜோர்தான் அறிவித்துள்ளது.
இதேவேளை மத்திய கிழக்கு பதற்ற நிலைமைகளால் மாற்று வழித் தளங்களை பயன்படுத்தப்படும் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம் ஆகியவற்றை பயன்படுத்த இடம் அளிப்பதென இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment