BREAKING NEWS

ஹஜ் குர்பானிக்கு தடையா?

போயா நாள் த‌விர்ந்த‌ அடுத்த‌ நாட்க‌ளில் முஸ்லிம்க‌ள் த‌ம‌து ஹ‌ஜ் குர்பானியை கொடுக்க‌லாம் என்ற‌ பிர‌க‌ட‌ன‌த்தை அர‌சு வெளியிட‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வேண்டுகோள் விடுத்துள்ள‌து. அக்க‌ட்சி தெரிவித்திருப்ப‌தாவ‌து, எதிர்வரும் மே மாதம் 27 அல்ல‌து 28 ஆம் திகதி ஹஜ் பெருநாள் இடம் பெறவுள்ள நிலையில் 30 ஆம் திகதி விசாகப் பெளர்ணமி தினமும் வருகிறது. ஹஜ் பொது விடுமுறை மற்றும் விசாக பெளர்ணமி தின விடுமுறையுடன் உள்ளடங்களாக 27 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 02 ஆம் திகதி வரை பெளத்த விசாக வாரமாக அமைச்சரவை பிரகடனம் செய்துள்ளது. இன‌வாதி க‌ம்ம‌ன்பில‌வின் கோரிக்கையை ஏற்று அர‌சு இப்பிர‌க‌ட‌ன‌ம் செய்துள்ள‌து. நாட்டில் எப்ப‌டியாவ‌து இன‌ முறுக‌லை ஏற்ப‌டுத்துவ‌து என்ப‌தே ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பின‌ரின் முய‌ற்சியாக‌ உள்ள‌து. இன‌வாத‌த்தை ஒழிக்க‌ முழு முய‌ற்சி எடுக்கும் இந்த‌ அர‌சுக்கு த‌லையிடி கொடுக்கும் வ‌கையிலேயே உத‌ய‌ க‌ம்ம‌ன்பில‌ போன்றோர் இத்த‌கைய‌ கோரிக்கைக‌ளை முன் வைக்கிறார்க‌ள். ஒரு கால‌த்தில் ஹ‌ஜ் பெருநாள் என்ப‌து பொது விடுமுறை தின‌மாக‌ இருந்த‌து. ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது 1998ம் ஆண்டு இந்த‌ பொது விடுமுறையை அன்றைய‌ அஷ்ர‌பின் அர‌சு ர‌த்து செய்து முஸ்லிம்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ அறிவித்த‌து. அத‌னை அப்போது முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி க‌டுமையாக‌ எதிர்த்திருந்த‌து. ஆயினும் இன்ன‌மும் ஹ‌ஜ் பெருநாள் தின‌ம் பொது விடுமுறை தின‌ம் இல்லை. இவ்வாறு ஹ‌ஜ் விடுமுறை முஸ்லிம்க‌ளுக்கு ம‌ட்டும் என்ப‌து போல் இத‌ன் ஹ‌ஜ் பெருநாள் தின‌த்தில் போயா தின‌ம் வ‌ந்தால் பௌத்த‌ ம‌க்கள் ம‌ட்டும் அத்தின‌த்தில் மாமிச‌ம் அறுக்க‌ கூடாது, சாப்பிட‌ கூடாது என்ற‌ ச‌ட்ட‌ம் வ‌ருமாயின் அதுவே நியாய‌மான‌தாக‌ இருக்கும். அத‌ற்குரிய‌ முய‌ற்சியை செய்யும் த‌குதி இன‌வாத‌ம‌ற்ற‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌ அர‌சுக்கே உண்டு. அப்ப‌டித்தான் முடியாது போனாலும் போயா நாள் த‌விர்ந்த‌ அடுத்த‌ நாட்க‌ளில் முஸ்லிம்க‌ள் த‌ம‌து ஹ‌ஜ் குர்பானியை கொடுக்க‌லாம் என்ற‌ பிர‌க‌ட‌ன‌த்தையாவ‌து அர‌சு வெளியிட‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கேட்டுக்கொள்கிற‌து. மு. முஸ்ன‌த் த‌லைவ‌ர் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar