BREAKING NEWS

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்

ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். மேலும், இரண்டு வார காலத்துக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் எனவும் கூறியுள்ளார். அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வார காலத்திற்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இது ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உயர்மட்ட பாதுகாப்புச் சபையின் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar