ஹிஸ்புல்லா எம்பிடம் 4,000 மில்லியன் டொலர்கள் கேள்வி
Posted by aljazeeralanka.com on June 16, 2026 in | Comments : 0
ஆன்மீகப்பக்குவம் பெற முடியாதோர் புனித ஹஜ்ஜை அரசிலுக்குள் நுழைக்க முயற்சி
பேசத்தலைப்பில்லாதவர்கள் ஹஜ் மினா பற்றி பேசுகிறார்கள்.
ஷேக் ஷபா உஸ்மானுடைய 4,000 மில்லியன் டொலர்கள் சம்பந்தமான தகவல்கள் தம்மிடமிருப்பதாக பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பதிலடி.
புனித ஹஜ் பயணத்தில் ஏற்படுகின்ற சவால்களை ஏற்றுக்கொண்டு ஆன்மீகப்பக்குவமடைய முடியாத சிலர் மார்க்கக்கடமையை அரசியலாக்க முயல்வதாக பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
ஹஜ் விடயம் சம்பந்தமாகவும் மினாவில் ஏற்பட்ட அசெளகரியங்கள் குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏஎம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்குப் பதிலளிக்கும் வகையிலே பிரதியமைச்சர் இவ்வாறு உரையாற்றினார்.
பாராளுமன்றத்தில் கடந்த 12ம் திகதி உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஹஜ் வாரத்தினையொட்டிய தினங்களில் புனித வெஷாக் வாரம் பிரகடணப்படுத்தப்பட்டிருந்ததை ஊடகங்களில் பெரிதுபடுத்தி இனங்களுக்கிடையில் முறுகல் நிலைகளை ஏற்படுத்த சிலர் முற்பட்டார்கள். இவ்விடயத்தினை கவனமாகக்கையாண்ட அரசாங்கம் இவர்களின் சில்லறை முயற்சிகளை முறியடித்திருந்தது.
முஸ்லிம் சமூகத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகங்களைக் கையாளுபவர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டுமென ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.
மீண்டும் இந்த நாட்டில் இனவாதம் ஏற்படுவதை விரும்புகின்றீர்களா.? இன்று பேசுவதற்கு தலைப்பில்லாத சிலரே, புனித மார்க்க விடயங்களை அரசியலுக்குள் நுழைக்கின்றனர். புனித ஹஜ் பயணத்தின் மகத்துவத்தையும் அதன் புனிதத்தையும் பற்றி புரியாதவர்களே மினாவில் நடந்தவற்றை விவாதிக்க களமிறங்கியுள்ளனர்.
ஷேக் ஷாபா உஸ்மானுடைய 4,000 மில்லியன் டொலர்கள் சம்பந்தமான விடயங்களும், அதனோடு சேர்ந்த தகவல்களும் எம்மிடமுள்ளது.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமொன்றினை நல்ல முறையில் நடாத்துவதற்கு கூட இடங்கொடுக்காமல் அதனை குழப்பியவர்கள் மினாவிலுள்ள ஹஜ்ஜாஜிகள் பற்றியும் அங்குள்ள மக்கள் பற்றியும் பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
எனவே, எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஹஜ் விடயத்தில் கரிசனையோடு ஒழுங்கு செய்து அடுத்த வருடம் இதை விடவும் சிறப்பானதாக செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.
அதேபோன்று, ஹஜ் சம்பந்தமான எத்தகைய விடயங்கள் பற்றியும் எவ்வாறான விசாரணைகளுக்கும் எமது ஹஜ் குழு தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
அஹமட் இர்ஷாட்.
தினகரன்,
15-06-2026
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment