இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் முன்வைத்த பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்கள்
Posted by aljazeeralanka.com on June 17, 2026 in | Comments : 0
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் முன்வைத்த பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்கள் தொடர்பாக
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. இப்ராஹிம் அன்ஸார் அவர்கள் 2026 ஜூன் 10 ஆம் திகதி “ShortNews.lk” ஊடாக முன்வைத்துள்ள பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களையும் புத்தக மதிப்பாய்வு மற்றும் வெளியீட்டுக் குழு (BRPC) முற்றாக மறுத்து, வன்மையாகக் கண்டிக்கிறது.
மேற்கண்ட அவதூறுகள், குழுவினதும் அதன் உறுப்பினர்களினதும் நற்பெயர், கண்ணியம் மற்றும் நேர்மைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டு வெளியிடப்பட்டவை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
குழுவும் அதன் உறுப்பினர்களும் எப்போதும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.
முக்கிய அறிவித்தல்:
இவ்விடயம் தொடர்பாக திரு. இப்ராஹிம் அன்ஸார் அவர்களுக்கும், மேற்கண்ட பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை வெளியிட்ட, பரப்பிய மற்றும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு தவறான பிரசாரங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க குழு உறுதியான முடிவை எடுத்துள்ளது.
மேலும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குழுவின் சட்ட ஆலோசகர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ISSUED ON
FRIDAY, 12TH OF JUNE 2026
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment