பெண்கள் இருவரும் குடிபோதையில்
Posted by aljazeeralanka.com on June 03, 2026 in | Comments : 0
சென்னையில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், தோழியை பார்ப்பதற்காக சென்னை வந்த யான்சி, கோயம்பேட்டில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார் . இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த இளம்பெண்கள் அங்கிருந்து வெளியேறி, நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கேளிக்கை விடுதியில் இருந்த ஒரு கும்பல் அவர்களை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் ஒருவர் மோதல் தொடர்பில் காணொளியொன்றில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது காணொளியில்,
நானும், எனது நண்பரும் வாரத்தில் 2 நாட்கள் கோயம்பேடு விடுதிக்கு செல்வது வழக்கம். அங்கு வேலை செய்யும் சிலர் எங்களுக்கு நண்பர்கள் என்பதால் சில நேரங்களில் இலவசமாக சென்று வருவோம்.
ஜோடியாக சென்றால் நுழைவு கட்டணம் இல்லை என்பதால் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து அங்கு வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழி ஆகியோர் தங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறியதால் அவர்களை நுழைவு கட்டணம் இல்லாமல் அழைத்துச் சென்றோம்.
இதன்போது நடனமாடும் போது, அங்கிருந்த சில இளைஞர்கள், இவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டு அனைவரையும் அங்கிருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இந்த நிலையில் பெண்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டோம். பெண்கள் இருவரும் நடுவில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு பின்னால் எனது நண்பர் அமர்ந்துகொள்ள ஒரே வண்டியில் 4 பேர் பயணம் செய்தோம்.
இதன்போது மதுபான விடுதிக்குள் ஏற்கனவே தகராறு செய்த நபர்கள், மற்றைய குழுவினர் சென்ற கார் மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதனால் கோபமடைந்த நபர்கள் நாங்கள் தான் கல்லை எறிந்ததாக நினைத்து 7 பேர் கொண்ட கும்பல் கோபத்தில் நாங்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்து மோதினார்கள்.
முதல் முறை இடித்த போது வாகனம் கீழே விழவில்லை. பின்னர் 2 ஆவதாக வேகமாக வந்து இடித்ததால் 4 பேரும் தூக்கி வீசப்பட்டதில் யான்சி அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
#sameehazafeer #chennai #srilanka
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment