BREAKING NEWS

மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு தீர்வு

மிக நீண்ட கால பிரச்சினையான மாளிகைக்காடு மையவாடி பிரச்சினைக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சுமூகமான முறையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பு காரணமாக அங்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய முடியாமலும் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் மேலெழும்பியும் பின்னர் அதனை மீள அடக்கம் செய்தும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த கால அரசியல்வாதிகள் இவ்விடயத்துக்கு தீர்வொன்றை வழங்காது அரசியல் செய்து வந்தநிலையில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் இன்று யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் பொது மையவாடி இடமொன்றுக்கான நிரந்தரத் தீர்வு காணப்பட்டுள்ளது. இன்று சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், காரைதீவு உதவித் திட்டமிடல் பணிப்பாளர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்,எஸ்.எம். முபாரக் அதன் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கம், மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல், சாலிஹீன் பள்ளிவாசல், சாய்ந்தமருது அக்ஷா பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகத்தினர் உட்பட ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். -ஊடக பிரிவு-

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar