BREAKING NEWS

பெளர்ணமி ஒன்றுகூடல்

ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அனுசரணையில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் க‌லைஞ‌ர்க‌ளின் பெளர்ணமி ஒன்றுகூடல் எனும் மகுடத்தின் கீழ் கலைஞர்கள் சந்திப்பும் கலைஞர்களின் கலை நிகழ்வும் நிந்தவூர் Relax gardanல் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் லக்ஸ்டோ மீடியா தலைவருமான கலாநிதி ஏ.எல். அன்ஸார் வழிகாட்டலில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பல்துறை சார் கலைஞர்கள் கல்விமான்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் விஷேடமாக சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூசா இலங்கை வானொலியின் மூத்த ஒலிபரப்பாளரும் பாடலாசிரியருமான ராஜ கவி ராஹில் இவர்களுடன் ஊடக சமூக செயற்பாட்டாளர் றியாத் ஏ.மஜீத் என பலரும் கலந்து கொண்டனர் பெளர்ணமி ஒன்றுகூடல் நிகழ்வானது இலக்கியவாதிகளின் சந்திப்பும் கதையாடலுமாக கலைஞர்களின் திறமைக்கான களமாகவும் மாதமொருமுறை பெளர்ணமி ஒன்றுகூடலாகவும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. செய்திகளுக்காக பழில்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar