BREAKING NEWS

எனது தந்தையின் மரணத்துக்கு அரசு பொறுப்பல்ல - ஹிருணிகா


எனது தந்தையின் மரணத்துக்கு அரசாங்கம் அல்ல, தனிநபர் ஒருவரே பொறுப்பு என மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர  தெரிவித்தார்.

“ஹிருணிகா உங்களின் குரல்" எனும் தனது உத்தியோகபூர்வ தேர்தல் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு. அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன் என்றார்.
இதேவேளை, தன்னை பிரபல மாக்கியது ஊடகங்களே. அதனை நான் மறக்கமாட்டேன். இருப்பினும் தற்போது இணையத்தளங்களினூடாக என்னைப்பற்றி மிகவும் மோசமான முறையில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அச்செய்திகள் முற்றிலும் தவறானது. இந்நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியல்களுக்கு அமைவாகவே பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளனர் என ஹிருணிகா மேலும் தெரிவித்தார்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar