தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் `வைகறை', சுமதி குகதாசனின் 'தளிர்களின் சுமைகள்' ஆகிய இரண்டு நூல்களின் ஆய்வரங்கு கொழும்பு – 06, தர்மாராம வீதி, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு, திரு. வி. கருணைநாதனின் தலைமையில் நடைபெற உள்ளது. சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை' சிறுகதைத் தொகுதி பற்றிய ஆய்வை திக்வல்லை கமாலும், சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் என்ற தலைப்பில் ஆய்வை லெனின் மதிவானமும் நிகழ்த்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் செய்துள்ளது.