BREAKING NEWS

முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுக்காக யார் உண்மையாக உழைப்பார்கள் குரல் கொடுப்பார்கள் என்று தேர்தல் காலங்களில் சிந்திப்பதில்லை.


வீட்டுக்குள் இருக்கும் தேளை அடித்து விட்டுத்தான் வெளியில் இருக்கும் பாம்பை அடிக்க வேண்டுமென்று சொல்லுவார்கள். ஆதலால் முஸ்லிம்களுக்கு இன்று அந்நிய சக்திகளை விடவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சிந்திக்கும் அரசியல்வாதிகளைத்தான் முஸ்லிம்கள் தங்களின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தங்களுக்காக யார் உண்மையாக உழைப்பார்கள் குரல் கொடுப்பார்கள் என்று தேர்தல் காலங்களில் சிந்திப்பதில்லை. யார் பணம் தருகிறார்கள் வேறு என்ன பொருள் தருகிறார்கள் என்று கணக்கிட்டு வாக்களித்ததன் காரணமாகத்தான் இன்று முஸ்லிம்களை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாதுள்ளனர். எதிர் காலத்தில் வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு யார் குரல் கொடுப்பார்கள் என்பதை மட்டும் கவனத்தில் எடுத்து வாக்களிக்க வேண்டும். இதனைச் செய்யாது தற்காலிக சிறு வருமானத்தை கவனத்தில் எடுத்து வாக்களித்தால் முஸ்லிம்கள் இன்றுள்ள பிரச்சினைகளை விடவும் அதிகமான பிரச்சினைளை சந்திக்க வேண்டியேற்படும்.
-எஸ் றிபான், விடிவெள்ளியில்  

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar