13வது திருத்தத்தை நீக்குவதற்கு ரஊப் ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னரே ஏனைய அசை;சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியிருப்பது அப்பட்டமான பொய்யும் மக்களை ஏமாற்றுவதுமான செயலுமாகும் என
முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
கல்முனையில் உள்ள கட்சிக்காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஓர் அரசியல்வாதி என்பவன் உண்மை பேசுபவனாகவும் மக்களை எமாற்றாதவனாகவும் இருக்க வேண்டும். அதிலும் முஸ்லிம் அரசியல்வாதி இதற்கு அதிக கடமைப்பாடுடையவன். ஆனால் என்ன பொய்யை சொல்லியாவது மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
13வது திருத்த சட்டத்தை முதலில் கடுமையாக எதிர்த்தவர்கள் அமைச்சர்களான வாசுதேவ, டி. ய+ குணசேகர, கலாநிதி திஸ்ஸ விதாரண போன்றவர்களாகும். இவர்களின் எதி;ப்பை பார்த்த பின்பே ஹக்கீம் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஹக்கீம் எதிர்த்ததன் பின்னர்தான் ஏனைய அமைச்சர்களுக்கும் எதிர்க்கும் துணிவு வந்ததாக தவம் பேசியிருப்பது சிரிப்பை தருவதுடன் ஒன்றில் இவருக்கு நாட்டு நடப்பு தெரியாததாக இருக்க வேண்டும். அல்லது ஏதோவொரு மயக்கத்தில் பேசயிருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
ஹக்கீம் எதிர்ப்பதற்கு முன்பே ஏனைய அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை; ஊடகங்களின் ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கத்தயாராக நாம் இருக்கின்றோம். அவ்வாறு நிரூபிக்கும் பட்சத்தில் அரசியலுக்கு தான் தகுதியற்றவன் என ஏற்றுக்கொண்டு தவம் தனது கிழக்கு மாகாண சபை பதவியை விட்டும் விலக தயாரா என கேட்கின்றோம். எமது இந்தச்சவாலை அவர் எற்காவிட்டால் அவர் ஒரு பொய்யர் என்பதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதே அர்த்தமகும்.
சில வேளை தனது பொய்யை மறைக்க, எனக்கு வாக்களித்த மக்களே என்னை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் என சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடலாம். அரசியல் தெரியாத மு. காவை சேர்ந்தோர் இவ்வாறுதான் அறிக்கை விடுவதை வழமையாக காண்கிறோம்.
மக்களிடம் பொய் சொல்லி அவர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கெதிராக பேச அவர்களுக்கு வாக்களித்திருக்க வேண்டும் என்பதில்லை. அரசுக்கு வாக்களிக்காத எதிர்க்கட்சிகள்தான் அரசை கடுமையாக விமர்சிப்பதை நாம் நமது நாட்டில்; மட்டுமல்ல உலகம் முழுவதிலும் காண்கின்றோம். இந்தச் சிறிய விடயத்தைக்கூட தெரியாதவர்கள்தான் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பது நமது மக்களின் தலையெழுத்தாகியுள்ளது.