கிரேன்ட்பாஸ் பள்ளி விடயத்தில் தான் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததே தவிர பிரச்சினையை உருவாக்க எந்த வகையிலும் தான் முயற்சிக்கவில்லை என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இன்று அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.
என்னை பெறுத்தவரையில் கண்டி மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்களில் 60 வீதமானோரின் வாக்குகளை பெற்று வந்தவன் அந்த வகையில் பௌத்த மக்களின் விருப்பத்துக்குள்ளவன். அதே போல் 40 வீதமான தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற்றவன். எனவே அனைத்து சமூகத்தவருக்கும் பொதுவானவனாக இருக்கின்றேன்.
கிரேன்ட்பாஸ் பள்ளி 1954 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இதனை நகர அபிவிருத்தி சபையினால் கைப்பற்றப்பட்டதன் காரணமாக புதியதொரு இடத்தை முஸ்லிம்கள் பள்ளிவாசலாக மாற்றினர். அதன் பின் இப்பள்ளிவாசல் தாக்குதலுக்கு உண்டானது.
இது விடயம் அறிந்து நான் அங்கு சென்று இரவு 7.30 முதல் இரவு 2 மணி வரை களத்தில் நின்று அனைத்து மக்களினதும் ஐக்கியத்திற்காக பாடுபட்டேன். என்னை பெறுத்தவரை சிங்கள முஸ்லிம் ஐக்கிய சக வாழ்வே முக்கியம்.
இதற்கு பின் புத்த சாசன அமைச்சில் நடந்த கலந்துரையாடலின் போது தொடர்ந்து அனைவரும் பழைய பள்ளிவாசல் தொழுவது என முடிவெடுக்கப்பட்டது.
கிரேன்பாஸில் சில வீடுகளுக்கு தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது உண்மை. இது நாட்டின் சமாதானத்தை குலைக்க எடுக்கப்பட்ட முயற்சியாகும் பொதுவாக எந்த சமயஸ்தலமாக இருந்தாலும் அதனை தாக்க அனுமதிக்க முடியாது. இத்தகைய தாக்குதலை நாம் கண்டிக்க வேண்டும்.
தனது மத ஸ்தலத்துக்கு ஒருவர் செல்வது என்பது சிறந்க செயல். எனினும் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி சரி பிழை பார்ப்பதில் அர்த்தமில்லை. மாறாக அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே பிரதான விடயமாகும்.
நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது இந்த பள்ளி விடயத்தில் பிரச்சினையை நீக்க நல்ல தீர்வுக்காக முயற்சி எடுத்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு எனது நன்றிகள். அவரைப் போன்ற தலைவர்கள் இந்த நாட்டுக்கு தேவை.
இதன் போது அல் ஜஸீரா லங்கா ஆசிரியர் கேள்வி எழுப்புகையில் எந்த மதஸ்தலமாயினும், தனிநபர் சொத்தாயினும் அதனை தாக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இதுவரை பள்ளியை தாக்கியோர் யாரும் கைது செய்யப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதலளித்த பிரதி அமைச்சர் தனிநபரின் சொத்தை தாக்குவது என்பதை விட சமயஸ்தலத்தை தாக்குவது என்பது பாரதூரமான விடயமாகும். இதற்கு கட்டாயமாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

