BREAKING NEWS

தாய்­வானில் ஆளுங்­கட்சி கூட்­டத்தின் போது பாதணி வீச்சு



தாய்­வானின் ஆளும் கட்­சி­யான குவோ­மின்டங் கட்­சியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற வேளை நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கலகத் தடுப்பு பொலிஸார் மீது பாத­ணி­களை வீசி தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

இந்த ஆர்ப்­பாட்­டத்தில் தொழிற்­சா­லை­யொன்று மூடப்­பட்­டதால் வேலையை இழந்­த­வர்­களும் எதிர்க்­கட்­சி­யான ஜன­நா­யக முன்­னேற்றக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களும் பங்கு பற்­றி­யி­ருந்­தனர்.
அவர்கள் ஜனா­தி­ப­தியும் ஆளுங்­கட்சி தலை­வ­ரு­மான மா யிங்– ஜியோயு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்­பி­ய­படி பொலிஸார் மீது பாத­ணி­களை வீசி­யுள்­ளனர்.
இதன் போது ஆளுங் கட்சி கூட்டம் நடை­பெற்ற மண்­ட­பத்­துக்கு வெளி­யே­யுள்ள தடுப்பு வேலியில் ஏறிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar