BREAKING NEWS

கமரூனின் அறிக்கையை கண்டித்து கொழும்பில் ஆர்பாட்ட போரணி


ஐ. ஏ. காதிர் கான்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் வடபகுதி விஜயத்தின் பின்னர்ரான அவரது அறிக்கையை கண்டித்து, (22) ந்திகதி கொழும்பில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

கொழும்பு—தெவட்டகஹா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு, இந்த ஆர்பாட்ட பேரணி இடம் பெறவுள்ளது.
 ஒருதலை பட்சமாக இயங்கும் பிரிட்டிஸ் பிரதமின் கொள்கையை கண்டிக்கும் அமைப்பு, அந்த ஆர்பாட்ட போரணியை ஒழுங்கு செய்துள்ளது. “முஸ்லிம்களை கமரூன் மறந்தது ஏன்? , வடக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்கு கமரூன் செல்லாதது ஏன்? ,  அயர்லாந்துக்கு ஒரு நீதி- இலங்கை;கு ஒரு நீதியா? , பிரிட்டிஸ் பிரதமர் ஒருதலை பட்~மாக நடந்து கொள்வது ஏன்? , புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களை கமரூன் சந்திக்காதது ஏன்? , காத்தான்குடி முஸ்லிம் அநிதிகளில் கமரூன்  அக்கறை காட்டாதது ஏன்? , கமரூன் முஸ்லிம்களின் பிரச்சனைகளும் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”
 ஆகிய, வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகள் (போஸ்டர்கள்) ஆர்ப்பாட்ட பேரணியின் போது முன்வைக்கப் படவுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்தள்ளது.




Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar