BREAKING NEWS

பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது

உஜ்ஜையினி: பள்ளி மாணவியை கடத்தி 14 நாட்கள் உஜ்ஜையினி நகரில் 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று 14 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு உதவி கேட்டு, தனது வீட்டிலிருந்து 50 அடி தூரத்தில் உள்ள வீட்டில் வசிக்கும் 40 வயது நிரம்பிய வழக்கறிஞர் பாலகிருஷ்ண ஜோஷியை சந்தித்தார். அப்போது அம்மாணவியை சிறைபிடித்த வழக்கறிஞர் தொடர்ந்து 14 நாட்கள் அவரது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அம்மாணவியின் அழுகை குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வழக்கறிஞரை கைது செய்ததுடன் மாணவியையும் மீட்டனர். பெண்ணை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்த பெற்றோர், அவள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே அடைத்து வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். காப்பாற்றப்பட்ட மாணவி தன்னை வழக்கறிஞர் சிறைபிடித்தபோது அவரது மனைவியும், மகனும் அவருக்கு உதவி செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar