BREAKING NEWS

தென்மாகாணத்தின் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமானமும்,முஸ்லீம் பட்டதாரிகளின் புறக்கணிப்பும்



மகிந்த சிந்தையிதென்மாகாண கல்வி அமைச்சினால் கடந்த வருடம் (2012) இறுதிப்பகுதியில் 1200 பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடைவெளி காணப்படுவதாகவும் அதற்காக தென்மாகாண வசிப்பி;டத்தை கொண்ட பட்டதாரிகளிடம் விண்ணப்பத்தினையும் வேண்டி இருந்தது. அதன் பிரகாரம் சிங்கள முஸ்லீம் மற்றும் தமிழ் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்தார்கள். அதற்கா பரீட்சை 2013 ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்றது. இருப்பினும் சகலரையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பிதல் செய்து நேர்முகப்பரீட்சை நடைபெற்றது அதன் பிரகாரம் பட்டதாரிகள் 1040 (இதில் 40 பேர் முஸ்லீம்கள்) பேர் தெரிவு செய்யப்பட்டனர். மற்றும் சிங்களவர்கள் இரு கட்ட அமைப்பில் 1000  பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுக்  கொண்டு வருகின்றது. ஆனால் தெரிவு செய்ப்பட்ட முஸ்லீம் பட்டதாரிகளின் நிலைமையினை பாதிக்கப்பட்டவர்கள் சென்று கேட்டபோது தமிழ் ஆசிரியர்களுக்கான இடைவெளிகள் அதிகமாக உள்ளதால் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் போதாமையினாலும் மீண்டும் விண்ணப்பம்கோரி அதில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இவர்களுடன் சேர்ந்து கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதற்கமையவாக விண்ணப்பம் கோரப்பட்டு அதற்காக நேர்முகப்பரீட்சையும் நடைபெற்றது. அதில் 66 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அவ்வாறே இருக்க இறுதி நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வருகின்ற வியாழக்கிழமை (2013.12.26 ) கொடுக்கப்படவுள்ளது (அவர்களின் பெயர்விபரங்கள் வீரேகேசரி 2013-12-24 6 பக்கம் உள்ளது)  இதில் ஒரு முஸ்லீம் பட்டதாரிகளும் இல்லை என்பேதே வருத்தப்பட கூடிய விடமமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்கு முதல்  தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லீம் பாட்டதாரிகள் தொடர்பான எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமால் உள்ளனர். அவர்களுக்கு தருவோம் என்று சொல்லிக்கொன்றும் இருக்கின்றனர். இங்கு வருகின்ற வருடத்திற்காக தென்மாகாண தேர்தலை மையமாக கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கையாக உள்ளதான என்பது கேள்வியாக உள்ளது. தென்மாகாணத்திலேயே ஆசிரியர் தொழிலிக்கு வருவதற்கா விண்ணப்பித்த 150 மேற்பட்ட பாட்டதாரிகள் உள்ளபோது  அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளிமாகாணத்திலிருந்து தமிழ் பாட்டதாரிகளை நியமிப்பது எவ்வகையில் நியாயமானதாக காணப்படும். (இங்கு இனவாதம் பேசவில்லை தமிழ் மக்களுக்கு கொடுக்கும்போது தங்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்பதே தங்களின் கருந்தாக உள்ளது  இதனை தெளிவாக விளக்கிக் கொள்ளவேண்டும்). இதனை வெளிக்கொண்டுவருதற்கு தகுந்த ஒன்று ஊடாமே காணப்படுவதனால் இதனை பிரசுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளின் விருப்மாக உள்ளது இதன் மூலம் தங்களுக்கு தகுந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்று எதிர்பார்க்கின்றனர்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar