வாய் மூல விடைக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-
கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் ஏற்றுமதி பதனிடல் வலயம் அமைக்க திட்டமிடப்பட்டாலும் இன்னும் அந்தப் பணி ஆரம்பிக்கப் படவில்லை.வெளிநாட்டு முதலீட் டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளபோதும் தேவையான காணி பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது. இதனால் சம்பூர் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மாற்aடாக இந்த வலயத்தை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் காணிகளை பலாத்காரமாக பெற முடியாது. ஹோட்டல் அமைக்க காணி பெறப்பட்டாலும் அதற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. எங்கும் மக்களின் காணிகள் பலாத்கரமாக பெறப்படவில்லை என்றார்.