மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மகா அபிமானி விருதுகள்
Posted by
aljazeeralanka.com
on
December 07, 2013
in
|
நிர்மாணத்துறை சார்ந்த சிறந்த மேசன், தச்சன், குழாய் நீர் பொருத்துனர் போன்ற 10 துறைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மகா அபிமானி விருதுகள் நேற்று முன்தினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வைத்து வழங்கப்பட்டன. இதில் சிறந்த கட்டட நிர்மாணத்துறையில் முதல் இடம்பெற்றவருக்கு மூன்று இலட்சம் ரூபா நிதியும், மோட்டார் சைக்கிளும் 10 மில்லியன் ரூபா காப்புறுதித் திட்டமும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னவையும் அருகில் காணலாம்