நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்
பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில் கல்வி
அமைச்சு மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழையாக தப்பித்துக்கொண்டது.
க.பொ.த. (சா/த) பரீட்சையின் விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி
மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான வினாப்பத்திரத்தின் பகுதி-II லேயே
மேற்படி சர்ச்சைக்குரய கேள்வி இடம்பெற்றிருந்த்து.
வினாத்தாளில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அந்த பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ள வினாக்களில் ஐந்து வினாக்களுக்கு பரீட்சார்த்திகள்
விடையளிக்க வேண்டும். அதில் முதலாவது வினா கட்டாயமானதாகும். அந்த முதலாவது
வினாவில் மூன்றாவது பகுதி வினாவாகவே இந்த வினா உள்ளடக்கப்பட்டுள்ளது.
"இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?" என்று தமிழ்மொழி மூலமான வினாத்தாளில் வினவப்பட்டிருந்த்து.
உணமையில் இவ்வினா இஸ்லாமிய சட்டத்தின் பிரதான மூலாதாரங்கள் இரணடைக் குறிப்பிடுக என்றே இடம்பெற்றிருக்கவேண்டும்.
சிங்களமொழி மூலமான வினாப்பத்திரத்தில் அவ்வாறே வினவப்பட்டுள்ளது.
ඉස්ලාම් නීතියේ ප්රධාන මූලාශ්ර දෙකක් සඳහන් කරන්න
இப்பிழையை மொழிபெயர்ப்பாளரின்
மேல் சுமத்திவிட்டு கல்வி அமைச்சு தமது பொறுப்பிலிருந்து நழுவிவிட
முடியாது.
இது விடயத்தை முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி மட்டுமே கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.