BREAKING NEWS

கட்சி அலுவலகங்கள் அகற்றப்படுவது திடீர் நடவடிக்கை அல்ல; ஈ. பி. டி. பி. விளக்கம்

நெடுந்தீவிலிருந்து எமது அலுவலகம் நீக்கப்பட்டதையும், யாழ். குடாநாடு தழுவிய ரீதியில் உள்ள எமது அலுவலகங்களில் சிலவற்றை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதையும் திடீர் நடவடிக்கையாகவோ அவசர நடவடி க்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை.

நீண்டகாலமாகவே எமது அலுவலகங்களை ஒழுங்கமைப்பது மற்றும் கட்சியின் கட்டமைப்பை மீள் ஒழுங்கு செய்வது என்ற எமது ஆய்வுகளும், ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
இடையில் தேர்தலில் வந்ததாலும் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட் டிருந்த அரசியல் செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருந்ததாலும் எமது சீரமைப்புச் செயற்பாடுகள் காலதாமமடைந்திருந்தன.
தற்போது மாறியிருக்கும் அரசியல் சூழலையும் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட கட்சியின் செயற்பாடுகளின் மறுசீரமைப்புக்கான தேவையும் கவனத்தில் கொண்டு மாற்றங்களை ஒழுங்கு செய்வதையும் உள்ளக நிர்வாகக் கட்டமைப்பின் தேவையான மாற்றங்களைச் செய்வதையும் கட்சி செயற்படுத்தும் அதன் ஒரு நடவடிக்கையாகவே நெடுந்தீவு அலுவலம் மூடப்பட்டதும் தீவகத்திலுள்ள சில அலுவலகங்களை அகற்றிக் கொள்வதற்கான திட்டமுமாகும்.
எமது கட்சியின் திட்டங்களும் நடவடிக்கைகளும் எமது மக்களுக்கான நலன்களில் இருந்தும் எமது அரசியல் கொள்கைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவுமே இருக்கும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar