கல்முனை மாநகர மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காக வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்கள் என்ற கருத்து பிழையானது.
உண்மையில் கல்முனை முஸ்லிம் மக்கள் மு. காவுக்கு வாக்களிக்காவிட்டால் கல்முனையை தமிழர்கள் கைப்பற்றி தமிழர் மேயராக வந்து விடுவார் என்ற பூச்சாண்டி கதையை நம்பியும், சாய்ந்தமருதார்கள் ஒன்றாக வாக்களித்தால் கல்முனைக்குடியான் மேயராக வருவதை தடுக்க முடியும் என்றும், கல்முனைக்குடியாக்கள் ஒன்று சேர்ந்து வாக்களித்தால் சாய்ந்தமருதான் மேயராக வருவதை தடுக்க முடியும் என்ற இன பிரதேச வாத காரணங்களுக்காகவே மக்கள் வாக்களித்தார்கள். இவைதான் முஸ்லிம் காங்கிரஸ் பூராளிகளின் தேர்தல் பிரச்சாரமாகவும் இருந்தது.
எண்ணங்களின் படியே செயல்கள் நடக்கும் என்ற நபிமொழிக்கொப்ப இத்தகைய காரணங்களுக்காக வாக்களித்ததால் இன்று இவையே நடந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையை 1994 முதல் ஆட்சி செய்கிறது. இருந்தும் என்ன சேவையை மக்களுக்கு செய்துள்ளது.? கொள்ளையடித்தது மட்டும்தான் மிச்சம். இந்த நிலையில் நீங்கள் எமக்கு சேவை செய்ய வேண்டுமென்பதற்காகவே நாம் உங்களுக்கு வாக்களித்தோம் என மக்கள் முஸ்லிம் காங்கிரசை பார்த்து கூறுவது பொய்யானதாகும்.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்பது சுயநலவாதிகளின் கட்சி என்று எமக்கு 12 வருடங்களுக்கு முன் விளங்கிய உண்மை இப்போதுதான் கல்முனை மக்களுக்கு விளங்குகிறது என்பதில் அவர்கள் தெரிவிக்கும் கவலைகளில் தெரிகிறது.
-முபாறக் அப்துல் மஜீத்