BREAKING NEWS

கிரிக்கட் நிறைவேற்றுக்குழுவுக்கு ஒமர் ஹாஜி சுலைமான்.




இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக ஒமர் ஹாஜி சுலைமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்லி கல்லூரியின் பழைய மாணவரான இவர் சோனக (Moor) விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட் செயலாளரரும் ஸ்ரீலங்கா மேமன் சங்கத்தின் துணைத்தலைவருமான ஒமர் ஹாஜி சுலைமான் அவர்கள் பிரபல தொழிலதிபருமாவார்.


அத்துடன் ஸ்ரீலங்கா பிலியட்ஸ், ஸ்னூக்கர் நிறுவனத்;தின் முன்னாள் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாசிம் உமரின் சிரேஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒமர் ஹாஜி சுலைமான், இலங்கை கிரிக்கட் சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அச்சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar