BREAKING NEWS

15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 56 வயது!

வென்னப்புவ பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் 
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 56 வயதுடைய நபர் ஒருவரை விளக்கமறயில் வைக்குமாறு மாரவில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
வென்னப்புவ வய்க்கால பகுதியில் மில் நிலையமொன்றின் முகாமையாளருக்கே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த மில் நிலைய முகாமையாளரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் இதனையடுத்து தன்னை கடந்த 12ஆம் திகதி இரவு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும், சிறுமி கடந்த 14 ஆம் திகதி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
முறைப்பாட்டினையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரை, பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar