BREAKING NEWS

"சதிக்கு நான் பலியாகி விட்டேன்'' என்று பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார்

Ahamed Junaideen's photo.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், ""சதிக்கு நான் பலியாகி விட்டேன்'' என்று பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தரார் மேலும் கூறியிருப்பதாவது:

சசி தரூரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். அந்த சந்திப்பு ஒருமுறை இந்தியாவிலும், மறுமுறை துபாயிலும் நடைபெற்றது. அப்போது எங்களுடன் ஏராளமானோர் உடனிருந்தனர்.

சசி தரூர் குறித்து நான் எனது செய்தியில் எழுதியிருந்தேன். அதனை அவரது மனைவி சுனந்தா விரும்பவில்லை. தனக்கு தெரியாத பெண் ஒருவர், தனது கணவரை அதிகமாக புகழ்வதை சுனந்தா விரும்பாதது அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் என்னுடன் பேசக் கூடாது என்று சசி தரூரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சசி தரூர் தொடர்ந்து டுவிட்டர் வலைதளத்தில் என்னை பின்தொடர்ந்தார். அதற்கு சுனந்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

என்னுடன் பேசுவதாலோ அல்லது எனக்கு சசி தரூர் இமெயில் அனுப்புவதாலோ சுனந்தாவுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

கடந்த மே, ஜுன் மாதங்களில் சசி தரூருக்கும் சுனந்தாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது நான் அவர்களின் விஷயத்தில் தலையிட்டது கிடையாது. அப்போது என்னை சுனந்தாவுக்கு தெரியாது.

ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை நான் பேட்டி எடுத்தபோதுதான் என்னை முதன்முதலில் சுனந்தா குற்றம்சாட்டினார். அன்று முதல் சுனந்தா என்னுடன் மோதலில் ஈடுபட ஆரம்பித்தார். சதிக்கு நான் பலியாகி விட்டேன் என்று தரார் கூறியுள்ளார்.

டுவிட்டரில் புதிய புகைப்படம்: இதனிடையே, சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் உயிரிழப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், டுவிட்டர் வலைதளத்தில் ஏற்கெனவே இருந்த தனது புகைப்படத்தை மாற்றிவிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றுவது போன்ற புகைப்படத்தை மெஹர் தரார் வெளியிட்டுள்ளார்.

மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் இடையே தொடர்பிருப்பதாக சுனந்தா புஷ்கர் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். அதன்பிறகு, தில்லியில் உள்ள ஹோட்டலில் சுனந்தா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதேவேளை, எனது மனைவி சுனந்தா மரணம் தொடர்பாக நடத்தப்படும் எல்லா விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"எனது மனைவியை இழந்த சோகத்திலும் துக்கத்திலும் நான் தவித்துவருகிறேன். ஆனால், ஊடகங்களில் எனது மனைவியின் மரணம் தொடர்பாக பலவிதமான ஊகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஆகவே, எனது மனைவி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து விசாரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் விரைவிலேயே உண்மை தெரியவரும். சுனந்தா மரணம் தொடர்பான எல்லா விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளேன்' என்று கடிதத்தில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்டிஓ விசாரணை: இதற்கிடையே, சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரிடம் உதவி கோட்டாட்சியர் அலோக் சர்மா ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினார். அப்போது சசி தரூர் தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தார்.

ஏற்கெனவே சனிக்கிழமை அதிகாலையில் சசி தரூரிடம் உதவி கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். ஆனால், மிகவும் சோகத்துடன் காணப்பட்ட சசி தரூர், வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சனிக்கிழமை காலையில்தான் வீடு திரும்பினார். இதனால், அவரது வாக்குமூலத்தை ஞாயிற்றுக்கிழமை காலையில் உதவி கோட்டாட்சியர் பதிவு செய்தார்.

மத்திய இணை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா, தில்லி சாணக்கியபுரியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை இரவில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவரது உடலை போலீஸார் கைப்பற்றி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவரது மரணம் இயற்கையானதல்ல என்று பிரேத பரிசோதனையின்போது தெரியவந்தது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சுனந்தா மரணம் அடைந்ததால், அச் சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

"சுனந்தாவின் உடலில் சில காயங்கள் உள்ளன. அவரது மரணம் இயற்கைக்கு மாறானது; திடீரென நிகழ்ந்துள்ளது' என பிரதே பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க,தனது தோழி தற்கொலை செய்திருக்க மாட்டார் என்று அவரது தோழி லேகா சீனிவாசன் கூறினார். இவர் திருவனந்தபுரத்தில் கருணா அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இவர் சுனந்தாவின் நெருங்கிய தோழி ஆவார். லேகா நடத்தி வரும் அறக்கட்டளை ஆண்டு விழாவில் சசிதரூருடன், சுனந்தா கலந்து கொண்டார். அப்போதே சுனந்தா நோயால் அவதிப்பட்டு வந்ததாக லேகா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சுனந்தாவின் மரணம் சந்தேக மரணம் என்று கூறுகிறார்கள். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். தனக்கு நோய் இருப்பதை அவர் எவரிடமும் சொல்லமாட்டார். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் லட்சி தீப விழாவில் சுனந்தாவை சந்தித்தேன். அப்போது அவர் சோர்வாக காணப்பட்டார். அவரது பேச்சிலும், முகத்திலும் அது தெளிவாக தெரிந்தது. நான் டெல்லிக்கு செல்லும்போது சுனந்தாவை சந்தித்துப் பேசுவேன். அவர் இப்படி திடீர் மரணம் அடைவார் என்று நான் நினைக்கவில்லை. சசிதரூரும், சுனந்தாவும் காதல் ஜோடி போல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவருக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் அவர் கடந்த 12_ம் தேதி சிகிச்சை பெற்றார். அவரை மீண்டும் 21_ம் தேதி சிகிச்சைக்கு வருமாறு மருத்துவர் கள் கூறினர். பின்னர் அவர் விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு நட்சத்திர ஹோட்டலில் இறந்து கிடந்தார். திருவந்தபுரத்திலிருந்து விமானத்தில் செல்லும் போதே அவர் உடல்நிலை மோசமாக இருந்தது என்று அவரசு செயலாளர் சதா சிவன் கூறினார்.
சுனந்தா மர்மச் சாவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் சசிதரூரை டிஸ்மிஸ் செய்து விட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு போர்க்கொடியை உயர்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் சசிதரூருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சசிதரூரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

ஐ.நா. சபையில் இந்திய பிரதிநிதியாக பணி புரிந்த சசிதரூர் அரசியலுக்கு திரும்பியது முதல் சர்ச்சையில் சிக்கி வந்தார்.

அரசியலில் நுழைந்த உடனேயே மத்திய அமைச்சரானார். 2 மனைவிகளை விவாகரத்து செய்த அவர் தனது 57 _வது வயதில் 42 வயது பெண்ணான சுனந்தாவை 3_வது திருமணம் செய்தார்.

அடுத்து கொச்சி ஐ.பி.எல். அணியின் பினாமியாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதனால் ஒரே வருடத்தில் அமைச்சர் பதவியை

இழந்தார்.

அதன் பிறகு 2012 ல் மீண்டும் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது போன்ற தொடர் சர்ச்சைகளுக்கு இடையே சமீபத்தில் அவரது கள்ளக்காதல் விவகாரம் வெடித்தது.

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெகர் எனது கணவரை பின் தொடர்கிறார். அவர் ஐ.எஸ்.ஐ. உளவாளி. உங்களை விட்டு நான் பிரிந்து போக வைத்து விடாதீர்கள் சசி என்று சுனந்தா கூறியிருந்தார்.

இது பற்றி பத்திரிகைகள், ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்த நிலையில் தான் டெல்லி ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசிதரூருக்கு டெல்லியில் அரசு ஒதுக்கிய வீட்டில் வெள்ளையடிக்கும் பணி நடப்பதால் இருவரும் சாணக்கியா புரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 18 _ம் தேதி முதல் தங்கி இருந்தனர்.

சுனந்தா தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் மத்திய அமைச்சர் சசிதரூர்

தனியாக தங்கி இருந்தார்.

சசிதரூர் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இரவு 7 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பிய போது தான் அவர் இறந்து கிடந்தார்.

சுனந்தா உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது எப்படி இறந்தார் என்பன போன்ற கேள்விகள்

எழுந்தன.

இது முக்கியமான சம்பவம் என்பதால் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள் குழு சுனந்தாவின் உடலை முழுமையாக ஆய்வு செய்தனர்.

காலையில் தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தது. அவரது

குடல் உள்ளிட்ட முக்கியமான உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவரது மரணம் குறித்து தடயவியல் துறை டாக்டர் சுதீர் குப்தா நிருபர்களிடம் கூறு கயில், சுனந்தா மரணம் இயற்கையானது அல்ல. அவரது உடலில் காயங்கள் உள்ளன.

ஆனால் அந்தகாயங்களால் மரணம் ஏற்படுத்த முடியாது. அவரது உடலில் இருந்து சில மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். என்றார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை நடத்திய மற்றொரு டாக்டர்கூறுகையில் சுனந்தா அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் தான் மரணம் அடைந்தார் என்று ஆரம்ப கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக கூறினார்.

சுனந்தா உடலில் விஷம் இல்லை. அளவுக்கு அதிகமான மருந்துகளும், மதுவும் சேர்ந்து அவரது உயிரைபறித்துள்ளது. என்று மேலோட்டமான பிரேத பரிசோதனை தகவல் கூறுகிறது.

இதற்கிடையே சசிதரூர் _ சுனந்தா இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்தது தெரிய வருகிறது. இருவரும் விமானப்பயணம், ஓட்டல் போன்றவற்றில் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் சசிதரூருக்கும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர்மெகருக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே நட்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மெகருடனான நட்பை துண்டித்து விடும்படி அப்போது இருந்தே சுனந்தா கண்டித்து வந்துள்ளார். அதை அவர் கேட்காததால் இருவருக்கும் மோதல் முற்றியுள்ளது.

மனைவி மரணத்தால் சசிதரூர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குரல் எழுந்துள்ளது.

தற்போது சசிதரூரிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்திய பின்பு பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு எதிரான பிடி மேலும் இறுகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் கூறுகையில், தனக்கும் சுனந்தா மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். சசிதரூரை தான் இரண்டு முறை தான் பார்த்ததாகவும் மற்றவர்கள் பேசுவது போலத் தான் அவரிடம் தான் பேசியதாக வும் ஆனால் அதைக் கூட சுனந்தாவால் ஜீரணிக்க முடியவில்லயே என்று வேதனையோடு குறிப்பிட்டார். தனக்கு இதில் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்றும் அவர் மறுத்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar