BREAKING NEWS

வர்த்தகம், சுற்றுலா குறித்து பரிஸில் ஆராய்வு - பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பங்கேற்பு

பிரான்ஸின் தலைநகர் பரிஸில், கடந்த 18ஆம் திகதி முதல் நடைபெறும் முதலீட்டு வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பிரான்ஸ்  பயணமாகியுள்ளார்.
ஐரோப்பிய சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் நடைnறும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான மாநாடு,
 ; கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி வரை பரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில்   பிரதியமைச்;சர்   முதலீடு, வர்த்தகம் மற்றும் வியாபாரம்  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக உரையாடினார்.
2014ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய  வர்த்தகம், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்ற விடயங்கள் குறித்தும் இம்மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இம்மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வர்த்தகம்,  முதலீட்டுத் துறை சார்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பிரதிநிதிகள் பலரும்  கலந்து கொண்டனர்.  
இம்மாநாடு முடிவடைந்தவுடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை நாடு திரும்பவுள்ளதாக, பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar