மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் மகன் டாக்டர் கவிந்து ஜயவர்த்தன எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே டாக்டர் கவிந்து ஜயவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
எனது தந்தை இந்த நாட்டில் விட்டுச் சென்ற சேவையை தொடரவே நான் அரசியலுக்குள் வந்துள்ளேன். அவர் விட்டுச் சென்ற சேவையை நான் தொடர்வேன். அனைத்து இன மற்றும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் நான் சேவையாற்றுவேன். எனது தந்தை டாக்டர் ஜயலத் வர்த்தன சகோதர இன மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார். அதனை நான் தொடர்வேன். அத்துடன் அனைத்து இன மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார்.