BREAKING NEWS

எரிந்து சாம்பலாகிய எங்கள் வீடுகளை கட்டித்தாருங்கள் :

மூன்று வருடங்களாகியும் தீயினால் எரிந்து சாம்பலாகிய வீடுகளை  அரசியல் வாதிககளை கட்டி தருமாறு அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து மக்கள்மேலும் தெரிவிக்கையில்,
 
"கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 12 திகதியன்று இரவு ஊர் மக்கள் உறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தினால் 24 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் பெருமதிமிக்க உடமைகளும் எரிந்து சாம்பலாகியது. அத்துடன் சிறுவர்கள் உட்பட பெரியோர்களும் நடு தெருவிற்கு வந்தனர். தீ விபத்தன்று அரசியல் வாதிகள் தங்கள் சொகுசு வாகனங்களில் ஊர் மக்கள் வியக்க சில பொருட்களை வழங்கியதுடன் உறுதியான வாக்குரிதிகளும் வழங்கி சென்றவர்கள் 5 வருடங்களாகியும் எம்மை  திரும்பி கூட பார்க்கவில்லை.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தோட்ட நிர்வாகம் 3 மாதம் வரை தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்ததுடன் தற்காலிக கூடாரம் நீர் வசதி, மலசல கூட 
வசதி செய்துக்கொடுத்தனர். நாம் தங்குவதற்காக தோட்டத்தில் உள்ள பழைய தொழிற்சாலை கட்டிடத்தில் 10 அடி அறைகளால் பிரித்துக் கொடுத்தனர் ஆனால் இன்று அது மனிதர்கள் வாழமுடியாத இடமாக மாறியுள்ளது. 
 
2 வருடங்களுக்கு முன்பு இதே வீட்டில்இறந்த பாட்டியொருவரின் உடலை நல்லடக்கம் செய்ய செய்ய வேண்டிய கிரியைகள் கூட வீட்டின் முன் வைத்து செய்ய முடியாமல் நிலை ஏற்பட்டது.
நாம் தங்கியிருக்கும் இந்த பழைய தேயிலை தொழிற்சாலையில் மின்சார வசதி இல்லாமையால் மாணவர்கள் இரவு நேரங்களில் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
 
நாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து கொள்ளும் வகையில் மனந்தளராமல் பல அரசியல் வாதிகளின் காரியாலயங்களுக்கு ஏறி இறங்கிய போதிலும் எவ்வித 
பயனும் நாம் காணவில்லை.
 
தோட்ட நிர்வாகத்திடம் வீட்டை கட்டி தாருங்கள் என கூறிய போதிலும் 
நிதி இல்லை என தட்டிக்கழித்துவிட்டனர். எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட இலங்கை தொழிலாளர்களின் அதிகாரிகள் 160 கூரைதகரம் வழங்கிய போதும் அதனை தோட்ட நிர்வாகத்திற்கு ஒப்படைத்ததன் காரணமாக இதுவரை சம்பதப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை. 
 
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் எங்களுக்கு வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்."

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar