BREAKING NEWS

கல்முனை மாநகர வரி அறவீட்டாளர்கள் சேவை இடைநிறுத்தம்

- கல்முனை மாநகர மக்கள் சோலை வரி செலுத்த வேண்டாம் என வேண்டுகோள்.

கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நடுக்கட்ட உத்தியோகத்தர்களின் (வரி அறவீடடாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால்
அவர்களிடம் சோலை வரிகளை செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொது மக்களைக் கேட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலை வரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ஆம் ஆண்டு 25 பேர் தற்காலிக அடிப்படையில் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனினும் அவர்களுடைய சேவை 2013 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் வீடுகளுக்கு வந்து சோலைவரிக் கட்டணங்களை யாராவது கோரினால், அவர்களிடம் அதனைச் செலுத்த வேண்டாம் என மாநகர ஆணையாளர், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார்.

அதேவேளை சோலை வரி செலுத்த வேண்டிய பொது மக்கள், கல்முனை மாநகர சபைக்கு நேரடியாக வருகை தந்து- உரிய அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி- பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்.

அதேவேளை கடந்த காலங்களில் தற்காலிக நடுக்கட்ட உத்தியோகத்தர்களினால் பொது மக்களிடம் அறவிடப்பட்ட சோலை வரிப் பணங்கள் உரியவர்களினால் கல்முனை மாநகர சபையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar