அடுத்த வருடம் ஊவா, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கான தேர்தலை
நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின் தல்பிட்டிய மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களை அமைச்சர் நேற்று திறந்துவைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் மறுசீரமைக்கப்படுவதுடன், அச்சங்கங்களின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.