BREAKING NEWS

மேல் மாகாண சபை கலைப்பு

மேல்மாகாண சபையை கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படுமென மேல்மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
 
மேல்மாகாண சபையின் முதலைமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
 
மேல்மாகாண சபை கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படும்.
 
இந்நிலையில் மேல்மாகாண சபை கலைப்பதை மாத்திரமே என்னால் முடிவெடுக்க முடியுமே தவிர தேர்தல் இடம்பெறும் திகதியை அறிவிக்க முடியாது.
 
சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நடசத்திரங்களை தேர்தலில் போட்டியிட வைப்பது வாக்குகளை அதிகரிக்கவே. ஆனால் நல்லவர்களை தீர்மானிப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.
 
கடந்த கால தேர்தல்களைவிட இம்முறை இடம்பெறும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
 
இதேவேளை, தமிழ் கட்சிகள் இம்முறை மேல்மாகாண சபையில் தனித்து போட்டியிடுவதை வரவேற்கின்றோம். அப்போது தான் தேர்தலில் போட்டி நிலை உருவாகும். இருப்பினும் நாம் இத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar