விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது மனைவியான அம்பன் பொல ஆஷா விஜயந்தி பெரேரா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் மஹிந்தானந்தாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை தான் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்து கணவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக அமைச்சரின் மனைவி பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு ஏற்கனவே கடிதம் மூலம் முறைப்பா ஒன்றை செய்திருந்தார்.
இந்நிலையில், தனது கணவருக்கு எதிராக உரிய விசாரணைகள் முன்னெடுக்கவில்லை எனவும் தனது கணவர் மீண்டும் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மஹிந்தானந்தவுக்கும் அவரது மனைவி ஆஷா விஜயந்திக்கும் இடையில் விவாகரத்து வழக்கொன்று கடுவெல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.