2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியன்று மேற்கொள்ளப்பட வுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
இதற்கான தகவல்களை வழங்க விரும்பும் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்பதாக விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொகமட் தெரிவித்தார்.
திருத்தப்படும் வாக்காளர் பட்டியல் பின்னர் பொது மக்களின் பார்வைக்காக பிரதேச செயலகங்கள், மற்றும் உள்ளூ ராட்சி சபைகளில் காட்சிப்படுத்தப்பட வுள்ளன.