சவுதி அரேபியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான சவுதி கெஸட் என்ற பத்திரிகையின் ஆசிரியராக சுமையா ஜபர்தி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இது சவுதி அரேபியா வரலாற்றில் முதன் முறையாகும்
இதுகுறித்து சுமையா ஜபர்தி கூறுகையில், இப்போது தான் கட்டுப்பாடுகள் என்ற கண்ணாடி மாளிகையின் மேற்கூரை விரிசல் விட்டுள்ளது, விரைவில் வாசற்கதவும் விரிவடையும் எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பணியின் மூலம் சவுதியில் வாழும் பல பெண்கள் அடுத்தடுத்து ஊடக துறையில் தடம் பதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று தெரிவித்துள்ளார்.
