BREAKING NEWS

கண் பரிசோதனை சிகிச்சை முகாம் கிறேண்ட்பாஸில் சனிக்கிழமை நடைபெறும் - பைஸர் முஸ்தபா மன்றம் ஏற்பாடு


ஐ. ஏ. காதிர் கான்

பைஸர் முஸ்தபா மன்றம்,  ஜோன் கீல்ஸ் மன்றத்துடன் இணைந்து, கண் பரிசோதனை மற்றும் கண்ணில் வெண் படலம் தொடர்பான
பிரச்சினைகளுக்கு, இலவச சிகிச்சைகள் வழங்கும்  வைத்திய சிகிச்சை முகாமொன்றை, எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை, கொழும்பு -14,  இல.182,கிறேண்ட்பாஸ் வீதியில் அமைந்துள்ள, மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நடாத்தவுள்ளது.
இந்த வைத்திய முகாம் நடைபெறும் அன்றைய தினமே  சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான திகதி;, இங்கு சிகிச்சை பெற வருவோர்களுக்கு, வைத்தியர்களினால் அறிவிக்கப்படும் என்றும் பைஸர் முஸ்தபா மன்றம் தெரிவித்துள்ளது.
பைஸர் முஸ்தபா மன்றம், தேவை நாடும் மகளிர் அமைப்புடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பெண்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை, அண்மையில் கிறேண்ட்பாஸில் ஏற்பாடு செய்திருந்தமையும்.
  இதே வேளை, லங்கா ஐ.ஓ.சீ. நிறுவனத்துடன் இணைந்து, கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் 15 ஞாயிறு சமயப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட 1,500 மாணவர்களுக்கான 6 மாத கால ஆங்கில மொழிக் கற்கை நிகழ்ச்சித் திட்டமொன்றை, கொழும்பு மாவட்டத்தில் கடந்த (2014) ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar